தென்காசியில் ரயில் விபத்தை தடுத்த தம்பதிகளுக்கு தென்னக ரயில்வே சார்பாக பாராட்டும் பரிசுத்தொகையும் இன்று வழங்கப்பட்டது.
தமிழக கேரள எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை எஸ் வளைவு பகுதியில், கடந்த மாதம் 25ஆம் தேதி தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அப்போது சாமர்த்தியமாக செயல்பட்டு விபத்தை தடுத்த தம்பதிகள் சண்முகையா – வடக்குத்தி அம்மாள் ஆகியோர், டார்ச் லைட் அடித்து ரயில்வே தண்டவாளத்தில் ஓடிச் சென்று பெரும் விபத்தை தடுத்தனர்.
இந்த செயலை பாராட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.5 லட்சம் வழங்கி கௌரவித்தார். இந்நிலையில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா, அவரது மனைவி பிரியா ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பகவதிபுரம் ரயில் நிலையத்தில் தம்பதிகள் சண்முகையா – வடக்குத்தி அம்மாள் ஆகியோரை இன்று கௌரவித்து ரூ. 20 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கினர்.