உதகையில் கட்டுமான பணியின்போது விபத்து: 7 பேர் பலி!

நீலகிரி மாவட்டம் உதகை காந்தி நகரில் வீடு கட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது பள்ளம் தோண்டும் போது திடீரென கழிப்பிட கட்டிடம் எதிர்பாராத விதமாக தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் புதைந்தனர்.

அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்வப இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகியுள்ளனர். 3 பேர் நலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இடுபாடிகளில் சிக்கிய 3 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News