அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, சத்ய ராஜ், வினய் ராய் நடிப்பில் கடந்த 22ம் தேதி வெளியான படம் கனெக்ட்.
இப்படத்தை நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை தயாரித்திருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் புரமோஷன் செய்தார்.
படம் டெக்னிக்கல் ரீதியாக புதுவிதமான அனுபவத்தைக்கொடுத்தாலும், படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆன நிலையில் உலகளவில் ரூ.5.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். அதில் தமிழகத்தில் மட்டும் ரூ.4.2 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.