நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்துக்குப் புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஓக்கீடு செய்யாததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்றத் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.
மேலும், இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழுக்கங்கள் எழுப்பினர்.