மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இளைஞர் அழுகிய நிலையில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திட்ட அலுவலக முகாம் கட்டிடம் பாழடைந்த நிலையில் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது.
இந்த பாழடைந்த கட்டிடத்தில் துர்நாற்றம் வீசிய நிலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்னர். அதன் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்து பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று தொங்கி உள்ளது.
இதனையடுத்து உடலை கைப்பற்றி இறந்தவர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பா.கில்லனூர் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரது மகன் தீபன் (19) என்பது தெரிய வந்தது.
இவர் ஐடிஐ பிட்டர் படித்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சியிருந்து திருவாரூர் பகுதிக்கு கம்பி பிட்டர் வேலைத் தேடி வந்ததாகவும் வேலை கிடைக்காமல் வேலை தேடிக் கொண்டு இருந்ததாகவும் தினமும் தனது பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பெற்றோரிடம் தீபன் பேசாத காரணத்தினால் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் மகன் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
மேலும் இறந்த தீபன் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து கொலையா தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இளைஞர் அழுகிய நிலையில் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.