பல்லாவரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் கைது!

சென்னை பல்லாவரம் அடுத்த ஆட்டுத்தொட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தினேஷிற்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் ஆய்வாளர் தினேஷ் தலைமையிலான காவல்துறையினர் அங்கு கண்காணிப்பில் இருந்த போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் கண்டோன்மென்ட் பல்லாவரத்தை சேர்ந்த சிமியோன் ராஜன்(22), என்பதும் இவர் மீது ஏற்கனவே 4 வழிப்பறி, கொலை முயற்சி, கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து பல்லாவரம் கட்டபொம்மன் நகரில் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி வரும் தனியார் கல்லூரி மாணவர் ஜெயசூரியாவிடம் கொடுத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து லாபம் பார்த்து வந்துள்ளார். அதற்கு பதிலாக ஜெயசூரியாவிற்கு கஞ்சா புகைப்பதற்கு கொடுத்தாக தெரிவித்தார்.

அதன் பேரில் கல்லூரி மாணவர் ஜெயசூர்யாவை கைது செய்த பல்லாவரம் காவல்துறையினர் அவர் அறையில் இருந்து கஞ்சா ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவரிடமிருந்து மொத்தம் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் இருவர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News