சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஸ்ரீபெரும்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங்குடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது மலங்கானந்தபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ராஜப்பா, பெண்கள் உட்பட தனது ஆதரவாளர்களுடன் வேட்பாளருக்கு வரவேற்பளிக்க அழைத்தபோது அதனை தன்சிங் தடுத்துள்ளார்.
இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது அங்கிருந்த பெண்களை தன்சிங் ஒருமையில் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் கைகலப்பும் ஏற்பட்டதில் பிரச்சார வாகன கண்ணாடி உடைக்கபட்டது. மேலும் ஆத்திரமடைந்த பெண்கள் தன்சிங் ஒழிக என கோஷமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் காவல்துறையினர் கலைத்தனர்.