முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 1-ஆம் தேதி டெல்லி பயணம்!

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டத்தில் இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் செயலாற்றியது குறித்தும் தேர்தல் முடிவுக்கு பின் இந்தியா கூட்டணி எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

ஜூன் 1 தேதி காலை 7 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

RELATED ARTICLES

Recent News