டெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பிரதமரை சந்தித்து வலியுறுத்துவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்.26) சென்னையில் இருந்து, விமானத்தில், டெல்லி புறப்பட்டு சென்றார்.
முதல்வருடன், அரசின் தலைமை செயலர் முருகானந்தம், முதல்வரின் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றனர்.
தொடர்ந்து இன்று (செப்.27) காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காவல் படையினர் மரியாதை செலுத்தினர்.
பின்னர் டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.