சென்னை அல்லிக்குளம் தபால் நிலையத்தில் மேற்கூரை இடிந்து விபத்து இரண்டு தபால் ஊழியர்கள் படுகாயமடைந்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லி குளம் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் தபால்கள் அல்லிக்குளம் தபால் நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
அல்லிக்குளம் தபால் நிலையம் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் இந்த நிலையில் நேற்று இரவு தபால் நிலையத்தில் நிரந்தர ஊழியர்களான சிவா, கோபி, ஓய்வு பெற்று தற்போது தற்காலிக ஊழியராக பணிபுரித்து வரும் ரகுபதி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
திடீரென அல்லிக்குளம் தபால் நிலையம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஊழியர்கள் ரகுபதி மற்றும் சிவாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெரிய மேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.