நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சந்தித்தார். சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது:
இந்தியாவின் பெருமையான அசோக சக்கரம் தற்போது நிலவில் பதிக்கப்பட்டுள்ளது. நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும்.
நமது நாட்டின் கெளரவத்தை, பெருமையை உலகிற்கே நாம் நிரூபித்துள்ளோம். தென்னாப்ரிக்கா, கிரீஸ் சென்றிருந்தாலும் என் மனது முழுவதும் இங்குதான் இருந்தது. விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நான் தலைவணங்குகிறேன் என்று பிரதமர் பேசினார்.