பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி 2. இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களையே பெரும்பாலும் பெற்று வந்தது.
இருப்பினும், தொடர் விடுமுறை காரணமாக, குடும்ப ரசிகர்கள் மத்தியில் இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை கங்கனா ரணாவத் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சந்திரமுகி 2 திரைப்படம், 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், மற்ற முன்னணி சினிமா வலைதளங்களில், இப்படம் வெறும் 17 கோடி ரூபாய் மட்டும் வசூலித்துள்ளதாக கூறி வருகின்றனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே, படக்குழுவினர், இவ்வாறு செய்வதாக கூறி வருகின்றனர்.