தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் 26ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், ஒடிசா மற்றும் வட ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 8:30 மணிக்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய சில்கா ஏரி அருகில் நிலவியது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 26ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.