தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது, தீர்மானம் முழுமையானதாக இல்லை எனக்கூறி, பாஜக எம்எல்ஏகள், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
காவிரி நீரை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முழுமனதுடன் செயல்பட்டால்தான் நீரைப் பெற முடியும் காவிரி நீரைப் பெற அதிமுக எப்போதும் துணைநிற்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.