சென்னை தி நகரில் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மர்மமான முறையில் எரிந்து நாசமானது.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்த்தவர் கீர்த்திவர்மன் இவர் நேற்று சென்னை தியாகராய நகர் தெற்கு மேற்கு போக் சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு அருகே உள்ள வீடியோ கேம் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் திடீரென புகை வந்ததாக கூறப்படுகிறது. பிறகு கார் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது மேலும் சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் நவீன் என்பவர் காரும் திடீரென எரிந்தது தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மாம்பலம் தேனாம்பேட்டை உள்ளிட்ட நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த காரை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.