ராக்கி, சானிக் காயிதம் ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். இவர் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து, கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், இப்படம் தொடர்பான இரண்ட அப்டேட்களை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, இந்த படத்தின் டீசர், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அறிந்த தனுஷ் ரசிகர்கள், பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காகவும், டீசருக்காகவும், ஆவலுடன் காத்திருக்கின்றனர்.