அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள், தங்களது கருத்துக்களை Youtube-ல் கூறி வருகின்றனர். அதனை வைத்து பார்க்கும் போது கேப்டன் மில்லர் திரைப்படம் சிறப்பாக உள்ளதாகவும் இன்டெர்வல் பிளாக் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் வேற லெவலில் உள்ளது என்றும் பிரமிப்புடன் கூறி வருகிறார்கள்.
நடிப்பு அசுரன் என்பதை இந்த படத்திலும் தனுஷ் நிரூபித்துள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, கேப்டன் மில்லர் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் என்று தெரியவந்துள்ளது.