தேர்வில் வெற்றி..!நோயில் தோல்வி…! புற்றுநோயுடன் SSLC-தேர்வெழுதிய மாணவி உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவை அடுத்த தானேவில் உள்ள மாஜிவாடா பகுதியைச் சேர்ந்த 16-வயதான திவ்யா பவலேக்கு, கடந்த ஏப்ரல் 2021-ல் T-cell lymphoma புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதைதொடர்ந்து திவ்யா பவலே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
மேலும் பத்தாம் வகுப்புப் படித்து வந்த இவர் மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த காரணத்தால் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை.

தனது விடா முயற்சியில் சற்றும் மனம் தளராத திவ்யா சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையிலே படித்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியிருந்தார்.

தனது இடைவிடாது முயற்சியில் 81.60% சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், தனது முயற்சியால் 81.60% சதவீதம் மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றது அவர் படித்த பள்ளியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த திவ்யா ஆகஸ்ட் 1-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிகழ்வு அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது உயிர் ஊசாலடிய நிலையிலும்,தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் படித்த திவ்யாவிற்கு, தாம் தேர்வில் வெற்றி பெற்ற சந்தோஷத்தை அனுபவிக்காமலே உயிரிழந்திருப்பது கேட்பவரை கண்கலங்க வைத்துள்ளது.

மெய் வருத்தக் கூலி தரும் என்ற வள்ளுவரின் கூற்றுப்படி தனது உடலை வருத்தி இடைவிடாது
முயற்சியால் வெற்றி பெற்ற திவ்யா இறந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News