மேம்பாலங்கள் கட்ட மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்!

சென்னை அடையாறு, சோழிங்கநல்லூர் உள்பட 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 3, 4 மற்றும் 5-வது வழித்தடங்களில் புதிதாக மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் 61 ஆயிரத்து 841 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான தடத்தை 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் அமலுக்கு கொண்டு துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் அடையாறு, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம், காட்டுப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்றும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயணிகள் எளிதாக செல்ல முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News