தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக சேவைக் கட்டணத்தை உயர்த்தி வரும் நிலையில் லரும் தங்களது தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை மாற்றிவிடலாமா என்று யோசித்து வந்த வேளையில்தான், பிஎஸ்என்எல் அருமையான பிளான் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் விலை ஏற்றம் ஜூலை 3ஆம் தேதி முதலும் வோடஃபோன் விலை ஏற்றம் ஜூலை 4ஆம் தேதி முதலும் நடைமுறைக்கு வருகின்றன.ஜியோ செல்போன் சேவைக் கட்டணம் 12% முதல் 25 % வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரூ.249க்கு மிகச் சிறப்பான பிளான் ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், ரூ.249க்கு ரீசார்ஜ் செய்தால், 45 நாள்கள் பயன்பாட்டுக் காலம், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி, அளவற்ற அழைப்பு, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம் என்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறது.