சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.