கஞ்சா பொட்டலத்துடன் சென்ற பாஜக நிர்வாகி கைது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் இன்று கொடைக்கானல் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டியன் கஞ்சா பொட்டலத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பாஜக நிர்வாகியை தடுத்து நிறுத்தி அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள், கூலி தொழிலாளர்கள், சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் வந்ததாக பாஜக நிர்வாகி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News