அன்றாடம் நாம் சமைக்கும் உணவு பொருட்களில், தக்காளி இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
ஆனால், தற்போது தக்காளியின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள இந்த விலை ஏற்றம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பாஜக அமைச்சர் ஒருவர், தக்காளி விலை ஏற்றம் குறித்து, சர்ச்சைகுரிய வகையில் பேசியுள்ளார். அதாவது, பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரதிபா சுக்லா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டிருந்தார்.
அப்போது பேசிய அவர், தக்காளியின் விலை அதிகமாக இருந்தால், மக்கள் அதை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் சாப்பிடலாம் என்றும், யாரும் தக்காளி சாப்பிடவில்லை என்றால், விலை குறையும் என்றும் தெரிவித்தார்.
விலையை குறைப்பதற்கான வழியை தோடாமல், பொறுப்பற்ற முறையில் அமைச்சர் பேசியிருப்பது, பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது.