பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவுக்கு தொடர்பு? – சபாநாயகர் அப்பாவு பேட்டி!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவினருக்கு தொடர்பு இருக்கலாம் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் இதுவரை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்களை வைத்து பார்க்கும் போது இந்த சம்பவத்தில் பாஜகவினருக்கு தொடர்பு இருக்கலாம் என தோன்றுகிறது.

பாஜக, இந்து மக்கள் கட்சி திட்டமிட்டு, தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்கவும், வன்முறையைத் தூண்டவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News