கர்நாடகாவில் உள்ள பெல்காம் நகரில், பாஜக சார்பில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட பாஜகவின் நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சஞ்சய் பட்டீல், சிறப்புரையாற்றி இருந்தார்.
அப்போது பேசிய அவர் பேசியது:-
“கர்நாடகாவின் 8 இடங்களில் நான் in-charge ஆக பணியாற்றி இருக்கிறேன். இதில், பெல்காம் பகுதியில், நிறைய பெண்கள், பாஜகவுக்கு ஆதரவு தருகிறார்கள்.
இதனால் தான், என்னுடைய தங்கச்சி ( லஷ்மி ஹெப்பல்கர் – கர்நாடக மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ) தூக்க மாத்திரை அல்லது Extra-ஆ ஒரு peg அடிச்சிட்டு, தூங்க வேண்டும் என்றேன். அவருக்கு, கர்நாடக மாநிலத்தில், பாஜக வளர்வது மிகுந்த கவலையாக உள்ளது.” என்று கூறியிருந்தார்
அதாவது, கர்நாடக மாநிலத்தில் பாஜக வளர்ந்து வருவதால், லஷ்மி ஹெப்பல்கர் கவலை அடைந்துள்ளார். அதனால், அவருக்கு நிம்மதியான தூக்கம் வருதற்கு, மது அல்லது தூக்க மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்குங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இவரது இந்த பேச்சு, இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், “யாரெல்லாம் பெண்களை கீழ் நிலையில் பார்க்கிறார்களோ, அதற்கு அவர்கள் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று அர்த்தம். பாஜக மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகளின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.
எனவே, பெண்களுக்கு எதிரான அவர்களது நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டது. கௌரவர்கள் மற்றும் ராவணனை போல, பாஜகவும், ஜேடிஎஸ்-ம், கண்டிப்பாக நிர்மூலமாக்கப்படுவார்கள்” என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி, எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
லஷ்மி ஹெப்பல்கரின் மகன் மிருனாள் ரவீந்தரா, கர்நாடகாவின் பெல்கம் தொகுதியில், போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பாஜக சார்பில், முன்னாள் கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.