விவசாயிகள் நலனில் பாஜக, காங்கிரஸிக்கு அக்கறை இல்லை: சந்திரசேகர ராவ்!

விவசாயிகள் நலனில் பாஜகவை போலவே காங்கிரஸ் கட்சிக்கும் அக்கறை இல்லை என்று தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளர்.

வனபர்த்தி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது: “விவசாயிகள் நலனில் பாஜகவை போலவே காங்கிரஸ் கட்சிக்கும் அக்கறை இல்லை.

இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்களின் நலன்களுக்காக மத்திய பாஜக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அவர்களுக்காக குரல் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி சொல்லிக் கொள்கிறது.

ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. இருந்தபோதிலும் தலித் மக்களின் நலனுக்காகவோ, இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவோ எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.

RELATED ARTICLES

Recent News