தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், தமிழக பாஜக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக பாஜக கிண்டல் செய்துள்ளது.
குலசேகரப்பட்டினம் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமர் மோடி உள்ளிட்டோரை வரவேற்கும் விதமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெயரில் அன்று தமிழக நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகின. அந்த விளம்பரத்தின் பின்னணியில் உள்ள ராக்கெட்டில் இந்திய கொடிக்கு பதிலாக சீனாவின் கொடி இடம்பெற்றது. இதனை குறிப்பிட்டு பாஜக திமுகவை ட்ரோல் செய்துவருகின்றது.
தமிழக பாஜகவின் அந்த பிறந்தநாள் வாழ்த்து பதிவில், “மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவருக்குப் பிடித்தமான மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!. அவர் நீண்ட ஆயுளுடன் வாழட்டும்!” என்று பதிவிட்டு முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துக்கு பின்னணியாக சீனாவின் கொடி, டிராகன் போன்றவற்றை பதிவிட்டு கிண்டல் செய்துள்ளது. இப்பதிவு தற்போது கவனம் பெற்றுவருகிறது.