பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் சில நாள்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று வெளியானது.
இந்த தேர்தலில் கயா மாநகராட்சியில் 40 ஆண்டுகளாக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய சிந்தா தேவி என்கிற பெண் துணை மேயராக வெற்றி பெற்றுள்ளார். இவர் துப்புரவு தொழிலாளராக சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளாக காய்கறி விற்று வந்த இவர் கயா மேயர் தேர்தலில் களம் கண்டார்.
சிந்தா தேவி தன்னை எதிர்த்து போட்டியிட்ட நிகிதா ரஜக் என்கிற வேட்பாளரை விட சுமார் 27 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்ற அபார வெற்றி பெற்றார். இதை வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஏற்கனவே கயா தொகுதி எம்பியாக கல் உடைக்கும் தொழிலாளியான பகவதி தேவி என்ற பெண் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.