இஸ்லாமியர்கள் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது.
இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம்.
இந்த நிலையில் இஸ்லாமியர்களின் தியாகப் பெருநாளான பக்ரீத் பண்டிகை உற்சாகமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிது. பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதலே மசூதிகளில் குவிந்தனர்.
தொழுகைக்கு பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்கா உள்ளிட்ட பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.