டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக தமிழகத்தில் வழக்கத்தை விட போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை மாநகரில் 3 ஆயிரம் போலீசார், புறநகரில் 1,000 போலீசார் என மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கிராஸ்கட் ரோடு, காந்திபுரம், டவுன்ஹால் மற்றும் கடைவீதி பகுதி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்துகின்றனர்.
காந்திபுரம், சிங்காநல்லூர் உக்கடம் பஸ் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கோவில் உள்பட தேவாலயங்கள், மசூதிகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இது தவிர கோவை ரெயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.