பல்கேரிய நாட்டை சேர்ந்த ஆண்மீகவாதி பாபாவாங்கா. அடுத்த நூற்றாண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்று இவர் கணித்து வைத்துள்ளார். இவர் உயிரிழந்த பிறகும், ஒவ்வொரு ஆண்டும் அந்த கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, வரும் ஆண்டில், சூரிய புயல் ஏற்படும் என்று பாபாவாங்கா கணித்துள்ளார். இதன்காரணமாக, ரேடியோ சிக்னல், இன்டர்நெட் உள்ளிட்ட தொலைதொடர்பு பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், செயற்கை கருப்பை உருவாக்கப்பட்டு, குழந்தையின் நிறம், உயரம், அறிவு ஆகியவற்றை நாமே முடிவு செய்யும் நிலை வரும் என்று கணித்துள்ளனர்.
இந்த கணிப்பு, கிட்டதட்ட இந்த ஆண்டு இறுதியிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. இதுமட்டுமின்றி, 2023-ஆம் ஆண்டில், ஏலியன்கள் பூமிக்கு வருவார்கள் என்றும், அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் அவர் கணித்து வைத்துள்ளார்.
2020-ஆம் ஆண்டு கணிப்பை காட்டிலும், 2023-ஆம் ஆண்டுக்கான கணிப்பு, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவரது கணிப்புகள் பல உண்மையாகவே நடந்துள்ளது. ஆனால், சில கணிப்புகள் நடக்காமலும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.