உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தி ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.
இதையொட்டி அயோத்தியில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நண்பகல் 12.29.08 வினாடிக்கு 121 வேதகர்கள் வேத மந்திரம் முழங்க பிரதிஷ்டை தொடங்குகிறது.
அதாவது, அயோத்தி ராமா் கோயிலில் இன்று நண்பகல் 12.29.08 மணி முதல் 12.30.32 வரை (84 வினாடிகளில்) 51 அங்குலம் உயரம் கொண்ட பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இந்த குறிப்பிட்ட நேரத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதிஷ்டையைத் தொடா்ந்து, நாளை முதல் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.