சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள சாஸ்திரி நகர் பிரதான சாலையில் ஆக்ஸிஸ்பேங்க் ஏடிஎம் அமைந்துள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் உள்ளிருந்து புகை கிளம்பி உள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்துள்ளனர். இதில்ஏடிஎம் இன் உள்பக்கத்தில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம்மில் ஏற்பட்ட மின் கசிவு விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. விசாரணை முடிவிலேயே ஏடிஎம்மில் இருந்த பணம் ஏதேனும் சேதம் அடைந்துள்ளதா என்பது தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.