ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவதார். உலக அளவில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது.
கிட்டத்தட்ட இந்த திரைப்படம் வெளியாகி 12-ஆண்டுகள் கழித்து, அதன் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை போலவே, இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியான 10 நாட்களில் மட்டும் 7 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை வசூலித்து, அபார சாதனை படைத்துள்ளது. வசூல் வேட்டை இப்படியே தொடர்ந்து நடந்து வந்தால், இந்த படத்தின் வசூல் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.