கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் ராகுல் யாத்திரை வாகனத்தின் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மட்டுமல்லாது ராகுல் காந்தி உருவம் அச்சிடப்பட்டிருந்த பேனர்களையும் கிழித்தெறிந்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர்தான் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே கூறுகையில், “அசாமின் லக்கிம்பூரில் யாத்திரையின் வாகனங்கள் மீதான தாக்குதலையும், காங்கிரஸ் கட்சியின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்த பாஜகவினரை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதல் மற்றும் மிரட்டல் தந்திரத்திற்கு காங்கிரஸ் கட்சி பயந்துவிடாது என்று கூறியுள்ளார்.