தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்தகோவில் பகுதியில் இருந்து ஆண்டிபட்டிக்கு வந்த அரசு பேருந்தில் சேக்கிழார்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் மாணவிகளை கேலி செய்ததாகவும் அதனை ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சித்தையகவுண்டன்பட்டி கிராமத்தைச்சேர்ந்த மாணவன் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவனை ரெங்கராம்பட்டி விலக்கு அருகே பேருந்து நிறுத்தத்தில் அடித்து கீழே தள்ளி விட்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், காயம் அடைந்த மாணவன் பெற்றோர் உதவியுடன் ஏத்தகோவில் புற காவல் நிலையத்தில் புகார் அளித்து ஆண்டிபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஆண்டிப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.