அஸ்வினுக்கு கமல் செய்யும் பேருதவி!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகர் அஸ்வின். என்ன சொல்ல போகிறாய் படத்தின் Press Meet-ல் இவர் பேசும்போது, உதவி இயக்குநர்கள் கதை சொல்வதை கேட்டு தூங்கிவிட்டேன் என்று நக்கலாக பேசியிருந்தார்.

இது, திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதோடு, இவரது சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், கமல் அஸ்வினுக்கு பேருதவியை செய்துள்ளார்.

அதாவது, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தில் அஸ்வின் நடிக்க இருக்கிறாராம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அஸ்வின் முன்னேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..

RELATED ARTICLES

Recent News