தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர், ப்ளு ஸ்டார், போர் தொழில் போன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிக் கடை என்ற படத்தில் நடிப்பதற்கு, அசோக் செல்வனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
தனுஷ் மீது இருந்த மரியாதையின் காரணமாக, கதையே கேட்காமல் அவரும் நடிக்க சென்றுள்ளாராம்.
ஆனால், அவரது கதாபாத்திரத்திற்கு வலு இல்லை என்பதால், அந்த படத்தில் இருந்து, அசோக் செல்வன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.