தலைநகர் டெல்லியின் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமானவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர், டெல்லி மதுபானக் கொள்ளை வழக்கில், கடந்த மார்ச் 21-ஆம் தேதி அன்று, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
தற்போது, நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவி வந்தது.
இந்த தகவலுக்கு விளக்கம் அளித்த திகார் சிறை நிர்வாகம், “ஏப்ரல் 20-ஆம் தேதி அன்று, வீடியோ கால் மூலமாக, எய்ம்ஸ் மருத்துவர்களால், அரவிந்த் கெஜ்ரிவால் பரிசோதிக்கப்பட்டார். அந்த சோதனையின் முடிவில், டெல்லி முதலமைச்சருக்கு எந்தவொரு ஆபத்தான உடல் பிரச்சனை இல்லை என்று மருத்துவர்கள் கூறியதாக”, சொல்லப்பட்டது.
இந்நிலையில், திகார் சிறையின் கண்காணிப்பாளருக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “என்னுடைய சுகர் லெவல் 250-ல் இருந்து 320-ஆக உள்ளது. அரசியல் அழுத்தம் காரணமாக, என்னுடைய உடல் ஆரோக்கியம் குறித்து, திகார் ஜெயில் நிர்வாகம் பொய் சொல்கிறது.” என்று கூறியுள்ளார்.
தன்னுடைய உடலுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதி அளித்திருப்பதை அவர் மறுத்துள்ளார். மேலும், தரவுகளின் அடிப்படையில், தன்னுடைய உடல்நலம் குறித்து மருத்துவர்கள் அறிக்கை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இவரது இந்த கடிதம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.