மதுபான கொள்கை ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதற்காக கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கியது.
இந்நிலையில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.ஆனால் உச்சநீதிமன்றம் கேஜரிவாலின் மனுவை நிராகரித்தது.
இதையடுத்து இடைக்கால ஜாமீனை மேலும் நீட்டிக்கக் கோரி மீண்டும் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.