திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் கந்த சஷ்டி விழா வருகிற நவம்பர் 13 ஆம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 18 ஆம் தேதி அன்றும் சுவாமியின் திருக்கல்யாணம் நவம்பர் 19 ஆம் தேதி அன்றும் நடைபெறவுள்ளது .
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளது. மேலும், இதற்காக 29 சிறப்புப் பணி அலுவலர்களை இந்து சமய அறநிலையத்துறை நியமித்துள்ளது.
