பழைய தரமான திரைப்படங்கள், மீண்டும் ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் தற்போது தொடங்கியுள்ளது. இவ்வாறு ரீ ரிலீஸ் செய்யும் படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், இது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் மட்டுமின்றி, தற்போது மற்ற மொழி பேசும் மாநிலங்களிலும், இந்த ட்ரெண்ட் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விக்ரம் நடித்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான அந்நியன் திரைப்படம், தெலுங்கு மொழியில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தை பார்த்த தெலுங்கு மொழி ரசிகர்கள், புதுப்படத்தை போல கொண்டாடி வருகின்றனர். ஒரு தமிழ் திரைப்படம், ரீ ரிலீஸில், வேறொரு மாநிலத்தில் கொண்டாடப்பட்டு வருவது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.