தமிழ்நாடு பாஜகவின் தலைவர் அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதில் அவர் பேசியது பின்வருமாறு:-
“அக்டோபர் 2-ஆம் தேதி அன்று RSS பேரியக்கம் நடத்த இருந்த பேரணியை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். தமிழகத்தில், இதற்கு முன்பும் பல நேரங்களில் இந்த பேரணி நடைபெற்ற இருக்கிறது.
தமிழக அரசு கடைசி நேரத்தில் அனுமதி இல்லை என்று கூறியிருப்பது, விசித்திரமாகவும், விந்தையாகவும் இருக்கிறது. இந்த அமைதி பேரணிக்கே போலீசார் அனுமதி தர மறுக்கிறார்கள் என்றால், மாநிலத்தின் சட்ட ஒழுங்கை எப்படி காப்பாற்ற போகிறார்கள்”
இவ்வாறு அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.