தமிழ்நாடு முழுவதும் திராவிட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேரறிஞர் அண்ணாதுரையின் 116-வது பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மக்களவை உறுப்பினர் கலாநிதி விராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை பல்வேறு இடங்களில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.