“கல் எரிவதற்கு கூட யாருக்கும் தைரியம் இல்லை” – ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று, நீக்கப்பட்டது. இதற்கு பெரும் எதிர்ப்பும், ஆதரவும் அன்று நிலவியிருந்தது.

பாஜக அரசின் இந்த நடவடிக்கை குறித்தும், தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ள சட்ட ஒழுங்கு குறித்தும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் பகுதியில், பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “ஜம்மு காஷ்மீரில் நிலைமை மிகவும் சாதாரணமாக தான் உள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம். அப்பகுதியில் கல் எரிவதற்கு கூட தற்போது யாருக்கும் தைரியும் இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஆர்டிகல் 370 நீக்கிய பிறகு, காஷ்மீரில் ரத்த சகதியாக உள்ளது என்று, மெகபூபா முப்தியும், ராகுல் பாபா ( காந்தி ) -வும் கூறி வருகிறார்கள்” என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமித்ஷா, வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட வேண்டும் என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளிலும், பாஜக வெல்லும் என்றும் கூறினார்.

RELATED ARTICLES

Recent News