பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆமிர் கான். இவரது மகனான ஜுனைட்கான், தற்போது இந்தி திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை முடித்த பிறகு, சுனில் பாண்டே என்பவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில், தமிழ் நடிகை சாய் பல்லவி தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இந்த திரைப்படம், சாய் பல்லவிக்கு சிறந்த பாலிவுட் என்ட்ரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.