மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் அமீர். தற்போது, முழுநேர நடிகராக மாறியுள்ள அவர், பல்வேறு நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது பிறந்த நாளை முன்னிட்டு, அமீர் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. உயிர் தமிழுக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், இந்த போஸ்டரை பார்க்கும்போது, அரசியல்வாதி கதாபத்திரத்தில், அமீர் நடிக்க உள்ளார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.