ஆலியா பட்-க்கு இப்படியொரு நோய்! ரசிகர்கள் அதிர்ச்சி!

கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று, நடிகை ஆலியா பட்-க்கு, பிரபல நடிகர் ரன்பீர் கபூருடன் திருமணம் நடந்தது. அப்போது, ஆலியா பட்டின் திருமண மேக்கப், மிகவும் எளிமையாக இருந்ததாக, பலரும் கூறி வந்தனர்.

இதற்கான காரணம் குறித்து, அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது, “தனது மேக்கப் கலைஞர், தனக்கு திருமண மேக்கப் போடுவதற்கு, 2 மணி நேரத்தை கொடுங்கள் என கேட்டார். ஆனால், நான் அவ்வளவு நேரத்தை வழங்க முடியாது என கூறிவிட்டேன்” என்று அந்த பேட்டியில், ஆலியா பட் பேசியுள்ளார்.

மேலும், “தனக்கு ADD என்ற கவனக்குறைவு நோய் இருப்பதாகவும், அதனால், ஒரே இடத்தில் நீண்ட நேரத்தை செலவிட முடியாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இவரது இந்த பேட்டியின் மூலம், ADD என்ற நோய் இவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இது ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News