துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய கதை, அஜித்திற்கு பிடிக்கவில்லை என்பதால், அவருக்கு பதிலாக வேறொரு இயக்குநர் படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கரும், அஜித்திடம் கதை ஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதை அஜித்திற்கு பிடித்துவிட்டால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல், அஜித் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.