பொதுவாக நடிகர்களின் பிறந்த நாள் அன்று, அவர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் அப்டேட்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நடிகர் அஜித்குமார் நாளை, தனது 53 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.
இதனால், அஜித் படத்தின் அப்டேட் வரும் என்று, ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அதுதொடர்பான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாம்.
இதுமட்டுமின்றி, அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு, தீனா, பில்லா ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.